அதிகாரம் 21

தீவினையச்சம்

Dread of Evil Deeds. இந்த அதிகாரத்தின் பத்து குறள்களும் தமிழ் பொருள்களும்.

குறள் 204

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.

பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.

குறள் 206

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பாலதன்னை அடல்வேண்டா தான்.

துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.

குறள் 207

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகைவீயாது பின்சென்று அடும்.

எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.