அதிகாரம் 96

குடிமை

Nobility. இந்த அதிகாரத்தின் பத்து குறள்களும் தமிழ் பொருள்களும்.

குறள் 952

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்இழுக்கார் குடிப்பிறந் தார்.

உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.

குறள் 953

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்வகையென்ப வாய்மைக் குடிக்கு.

உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்லப் பண்புகள் என்பர்.

குறள் 954

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்குன்றுவ செய்தல் இலர்.

பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.

குறள் 955

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடிபண்பில் தலைப்பிரிதல் இன்று.

தாம் பிறர்க்குக் கொடுத்துதவும் வன்மை வறுமையால் சுருங்கிய போதிலும், பழம் பெருமை உடைய குடியில் பிறந்தவர் தம் பண்பிலிருந்து நீங்குவதில்லை.

குறள் 957

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்மத஧க்கண் மறுப்போல் உயர்ந்து.

உயர் குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.

குறள் 958

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்குலத்தின்கண் ஐயப் படும்.

ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.

குறள் 959

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.

குறள் 960

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்வேண்டுக யார்க்கும் பணிவு.

ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும், குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.