அதிகாரம் 63

இடுக்கண் அழியாமை

Hopefulness in Trouble. இந்த அதிகாரத்தின் பத்து குறள்களும் தமிழ் பொருள்களும்.

குறள் 624

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்றஇடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.

குறள் 627

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்கையாறாக் கொள்ளாதாம் மேல்.

மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்த போது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டர்.

குறள் 629

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்துன்பம் உறுதல் இலன்.

இன்பம் வந்திக் காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை.