அதிகாரம் 26

புலால் மறுத்தல்

Abstinence from Flesh. இந்த அதிகாரத்தின் பத்து குறள்களும் தமிழ் பொருள்களும்.

குறள் 251

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்எங்ஙனம் ஆளும் அருள்?

தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்.

குறள் 252

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சிஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.

குறள் 253

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்உடல்சுவை உண்டார் மனம்.

ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.

குறள் 254

ருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்பொருளல்லது அவ்வூன் தினல்.

அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.

குறள் 256

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.

புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.

குறள் 259

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்உயிர்செகுத் துண்ணாமை நன்று.

நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.