அதிகாரம் 122

கனவுநிலை உரைத்தல்

The Visions of the Night. இந்த அதிகாரத்தின் பத்து குறள்களும் தமிழ் பொருள்களும்.

குறள் 1212

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்குஉயலுண்மை சாற்றுவேன் மன்.

கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.

குறள் 1214

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்நல்காரை நாடித் தரற்கு.

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.

குறள் 1215

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்கண்ட பொழுதே இனிது.

முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.