அதிகாரம் 12

நடுவு நிலைமை

Impartiality. இந்த அதிகாரத்தின் பத்து குறள்களும் தமிழ் பொருள்களும்.

குறள் 118

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்கோடாமை சான்றோர்க் கணி.

முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.