அதிகாரம் 13

அடக்கமுடைமை

The Possession of Self-restraint. இந்த அதிகாரத்தின் பத்து குறள்களும் தமிழ் பொருள்களும்.

குறள் 121

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும்.

அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.

குறள் 125

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்செல்வர்க்கே செல்வம் தகைத்து.

பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.

குறள் 126

ஒருநம்யுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்எழுநம்யும் ஏமாப் புடைத்து.

ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.

குறள் 127

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

குறள் 128

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்நன்றாகா தாகி விடும்.

தீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.

குறள் 130

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.