அதிகாரம் 109

தகையணங்குறுத்தல்

The Pre-marital love. இந்த அதிகாரத்தின் பத்து குறள்களும் தமிழ் பொருள்களும்.

குறள் 1082

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்குதானைக்கொண் டன்ன துடைத்து.

நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.

குறள் 1083

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்பெண்டகையால் பேரமர்க் கட்டு.

எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது