அதிகாரம் 80

நட்பாராய்தல்

Investigation in forming Friendships. இந்த அதிகாரத்தின் பத்து குறள்களும் தமிழ் பொருள்களும்.

குறள் 791

நாடாது நட் டலிற் கேடில்லை நட்டபின்வீடில்லை நட்பாள் பவர்க்கு.

நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.

குறள் 792

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறைதான்சாம் துயரம் தரும்.

ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும்.

குறள் 793

குணமும் குடிமையும் குற்றமும் குன்றாஇனனும் அறிந்தியாக்க நட்பு.

ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.

குறள் 794

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.

குறள் 795

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறியவல்லார்நடபு ஆய்ந்து கொளல்.

நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும்.

குறள் 798

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்கஅல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும், அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.

குறள் 799

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலைஉள்ளினும் உள்ளஞ் சுடும்.

கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.