அதிகாரம் 61

மடி இன்மை

Unsluggishness. இந்த அதிகாரத்தின் பத்து குறள்களும் தமிழ் பொருள்களும்.

குறள் 602

மடியை மடியா ஒழுகல் குடியைக்குடியாக வேண்டு பவர்.

தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்.

குறள் 607

இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்துமாண்ட உஞற்றி லவர்.

சோம்பலை விரும்பி மேற்க் கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர் பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்.