அதிகாரம் 15

பிறனில் விழையாமை

Not coveting another"s Wife. இந்த அதிகாரத்தின் பத்து குறள்களும் தமிழ் பொருள்களும்.

குறள் 141

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்துஅறம்பொருள் கண்டார்கண் இல்.

பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.

குறள் 142

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடைநின்றாரின் பேதையார் இல்.

அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

குறள் 143

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்தீமை புரிந்து ஒழுகு வார்.

ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.

குறள் 144

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்தேரான் பிறனில் புகல்.

தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?

குறள் 145

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்விளியாது நிற்கும் பழி.

இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்

குறள் 149

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்