அதிகாரம் 132

புலவி நுணுக்கம்

Feigned Anger. இந்த அதிகாரத்தின் பத்து குறள்களும் தமிழ் பொருள்களும்.

குறள் 1311

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்நண்ணேன் பரத்தநின் மார்பு.

பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.

குறள் 1312

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மைநீடுவாழ் கென்பாக் கறிந்து.

காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.

குறள் 1313

கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்காட்டிய சூடினீர் என்று.

கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.

குறள் 1315

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்கண்நிறை நீர்கொண் டனள்.

இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.

குறள் 1316

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்புல்லாள் புலத்தக் கனள்.

நினைத்தேன் என்று கூறி‌னேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.

குறள் 1317

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்யாருள்ளித் தும்மினீர் என்று.

யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்?

குறள் 1318

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்எம்மை மறைத்திரோ என்று.

அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள்.

குறள் 1319

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்இந்நீரர் ஆகுதிர் என்று.

ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று ‌சொல்லிச் சினம் கொள்வாள்.

குறள் 1320

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்யாருள்ளி நோக்கினீர் என்று.

அவளுடைய அழகை நி‌னைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்வாள்.