அதிகாரம் 131

புலவி

Pouting. இந்த அதிகாரத்தின் பத்து குறள்களும் தமிழ் பொருள்களும்.

குறள் 1302

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிதுமிக்கற்றால் நீள விடல்.

உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.

குறள் 1303

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்புலந்தாரைப் புல்லா விடல்.

தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது.

குறள் 1307

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வதுநீடுவ தன்று கொல் என்று.

கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.

குறள் 1310

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்கூடுவேம் என்பது அவா.

ஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.