அதிகாரம் 112

நலம் புனைந்துரைத்தல்

The Praise of her Beauty. இந்த அதிகாரத்தின் பத்து குறள்களும் தமிழ் பொருள்களும்.

குறள் 1112

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்பலர்காணும் பூவொக்கும் என்று.

நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்.

குறள் 1114

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்மாணிழை கண்ணொவ்வேம் என்று.

குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.

குறள் 1115

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்குநல்ல படாஅ பறை.

அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.

குறள் 1117

அறுவாய் நிறைந்த அவிர்மத஧ க்குப் போலமறுவுண்டோ மாதர் முகத்து.

குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே.