அதிகாரம் 108

கயமை

Baseness. இந்த அதிகாரத்தின் பத்து குறள்களும் தமிழ் பொருள்களும்.

குறள் 1078

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்கொல்லப் பயன்படும் கீழ்.

அணுகி குறைச் சொல்லுகின்ற அளவிலேயே சான்றோர் பயன்படுவர், கரும்புபோல் அழித்துப் பிழிந்தால் தான் கீழ்மக்கள் பயன்படுவர்.

குறள் 1080

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்விற்றற்கு உரியர் விரைந்து.

கயவர், எதற்கு உரியவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மை பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.