அதிகாரம் 107

இரவச்சம்

The Dread of Mendicancy. இந்த அதிகாரத்தின் பத்து குறள்களும் தமிழ் பொருள்களும்.

குறள் 1062

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றி யான்.

உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.

குறள் 1063

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்வன்மையின் வன்பாட்ட தில்.

வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம், என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை.

குறள் 1067

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்கரப்பார் இரவன்மின் என்று.

இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.

குறள் 1069

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ளஉள்ளதூஉம் இன்றிக் கெடும்.

இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும், உள்ளதை ஒழிக்கும் கொடுமையை நினைத்தால் உருகுமளவும் இல்லாமல் அழியும்.

குறள் 1070

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்சொல்லாடப் போஒம் உயிர்.

இரப்பவர் இல்லை என்று சொல்கின்ற அளவிலேயே உயிர் போகின்றதே, உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர் எங்கு ஒளிந்திருக்குமோ.