அதிகாரம் 94

சூது

Gambling. இந்த அதிகாரத்தின் பத்து குறள்களும் தமிழ் பொருள்களும்.

குறள் 931

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.

வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது.

குறள் 933

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்போஒய்ப் புறமே படும்.

ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.

குறள் 935

கவறும் கழகமும் கையும் தருக்கிஇவறியார் இல்லாகி யார்.

சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.

குறள் 937

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்கழகத்துக் காலை புகின்.

சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.

குறள் 938

பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்துஅல்லல் உழப்பிக்கும் சூது.

சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.

குறள் 940

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்உழத்தொறூஉம் காதற்று உயிர்.

பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல், உடல் துன்பப்பட்டு வருந்ந வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும்.