அதிகாரம் 130

நெஞ்சோடு புலத்தல்

Expostulation with Oneself. இந்த அதிகாரத்தின் பத்து குறள்களும் தமிழ் பொருள்களும்.

குறள் 1293

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீபெட்டாங்கு அவர்பின் செலல்.

நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்‌க்கு நண்பர் இல்லை என்னும் எண்ண‌மோ?

குறள் 1294

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சேதுனிசெய்து துவ்வாய்காண் மற்று.

நெஞ்‌சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?

குறள் 1295

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.

குறள் 1296

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்தினிய இருந்ததென் நெஞ்சு.

காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.

குறள் 1298

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது.