அதிகாரம் 111

புணர்ச்சி மகிழ்தல்

Rejoicing in the Embrace. இந்த அதிகாரத்தின் பத்து குறள்களும் தமிழ் பொருள்களும்.

குறள் 1101

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்ஒண்தொடி கண்ணே உள.

கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.

குறள் 1102

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைதன்நோய்க்குத் தானே மருந்து.

நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.

குறள் 1104

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்தீயாண்டுப் பெற்றாள் இவள்?

நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்.

குறள் 1105

வேட் ட பொழுதின் அவையவை போலுமேதோட் டார் கதுப்பினாள் தோள்.

மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைத்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.

குறள் 1106

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்குஅமிழ்தின் இயன்றன தோள்.

பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

குறள் 1110

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்செறிதோறும் சேயிழை மாட்டு.

செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல்,நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது.